இலங்கையிலும் நடைபெற உள்ள பிரிமீயர் லீக்

Photo of author

By Parthipan K

இலங்கையிலும் நடைபெற உள்ள பிரிமீயர் லீக்

Parthipan K

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடர் உலக அரங்கில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் போர்டும் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி்வைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. ஆனால் வெளிநாட்டு வீரர்களை 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளது.