இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

0
175

இதை ஒருமுறை ரெடி பண்ணி வச்சுக்கோங்க!! தலைமுடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையுமே இருக்காது!!

பல பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் முடி கொட்டுதல், முடி வளராமல் இருத்தல், வெள்ளை முடி வருதல், ஷாம்பூ பயன்படுத்தியதால் முடி வறட்சியாக மாறுதல், முடி மிருதுவாக இல்லாமல் கரடு முரடாக காணப்படுதல் போன்றவை அனைத்தும் ஏற்படுகிறது.

இதற்கான ஒரு ஹேர் பேக் முறையை இங்கு தெரிந்து கொள்வோம். இந்த ஹேர் பேக்கை தயார் செய்து வைத்து பத்து நாட்களுக்கும் கெட்டுப் போகாமல் பயன்படுத்தி வரலாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினாலே நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் இந்த ஹேர் பேக்கை ஆண்கள் பெண்கள் என இருவரும் தாராளமாக பயன்படுத்தலாம்.

எனவே இந்த பதிவில் சூப்பரான ஒரு ஹேர் பேக் முறை மற்றும் முடி நன்கு வளர்வதற்காக ஒரு எண்ணையை தயாரிப்பது குறித்தும் பார்க்கலாம். எனவே முதலில் முடி நன்கு கருகருவென காடு போல வளர்வதற்கு தேவையான ஒரு எண்ணையை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை
வெந்தயம்
மிளகு
பிரியாணி இலைகள்
தேங்காய் எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்
வைட்டமின் ஈ ஆயில்

கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இது முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும். வெந்தயம் முடி வளர்ச்சியை நன்கு தூண்டி முடிவில் இருக்கக்கூடிய அரிப்பு பொடுகு என அனைத்தையும் சரி செய்யும். மிளகு தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலையில் இருக்கக்கூடிய பேன் இரு என அனைத்து பிரச்சினையையும் தீர்க்கிறது.

தலையில் ஏற்படக்கூடிய அரிப்புகளை சரி செய்து முடி உதிர்ந்த இடங்களில் கூட புது முடியை வளர வைக்கும் சக்தி இந்த பிரியாணி இலைகளுக்கு உண்டு.

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை இலைகள், இரண்டு ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் மிளகு, இரண்டு பிரியாணி இலைகள் என அனைத்தையும் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 200 மில்லி லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் நாம் மறைத்து வைத்திருக்கக்கூடிய இந்த பொடியை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடவும். இந்த தேங்காய் எண்ணெயானது அடர்ந்த பச்சை நிறமாக மாறிய பிறகு ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு ஆமணக்கு எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் வைட்டமின் ஈ ஆயிலை சிறிதளவு சேர்த்து கலந்து இந்த எண்ணெயை வைத்துக் கொள்ளவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து விட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து வரவும்.

இப்போது இந்த எண்ணையை வைத்து ஒரு ஹேர் பேக்கை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கற்றாழை
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்

செய்முறை:
1. ஒரு மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

2. இதனுடன் ஒரு நாள் நன்கு புளிக்க வைத்து எடுத்திருக்கக்கூடிய சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

3. இது இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் கட்டிகள் இல்லாதவாறு நன்கு ஒரு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

4. இதனுடன் நாம் மேலே தயாரித்து வைத்திருக்கக்கூடிய எண்ணெயை மூன்று டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

இவ்வாறு செய்த இந்த ஹேர் பேக்கை காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து பத்து நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பயன்படுத்தி வரலாம்.

எனவே இரவு தூங்குவதற்கு முன்பாக மேலே குறிப்பிட்டு இருக்கக்கூடிய அந்த எண்ணெயை நன்கு தேய்த்து விட்டு மறுநாள் காலையில் இந்த ஹேர் பேக்கை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு சாதாரண ஒரு ஷாம்புவைக் கொண்டு தலைக்கு குளித்து வர முடி நன்கு வளர ஆரம்பிக்கும் முடி உதிர்வு இருக்கவே இருக்காது அதேபோல முடி மிகவும் மிருதுவாக பொலிவுடன் காணப்படும்.

 

Previous articleசிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!
Next articleமஞ்சள் நிறப்பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!