மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Photo of author

By Parthipan K

மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

முதலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரினம் செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து கோவை சென்று, ஈஷா மையத்தில் நடக்கும்  மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் பல முன்னணி நடிகர், நடிகளைகள், சினிமா பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மகாசிவராத்திரிக்கு குடியரசுத் தலைவர் வருகை தருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.