அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

0
123

 

அமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் வி.எஸ். அருணாசலம் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 87.

 

 

நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட அருணாச்சலம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தூக்கத்திலேயே அருணாச்சலம் அவரின் உயிர் பிரிந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

 

 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அருணாசலத்தின் மறைவு விஞ்ஞான உலகிலும், பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையிலும் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. சிறந்த அறிவாற்றல் மற்றும் ஆராய்ச்சி மீது கொண்டிருந்த ஆர்வத்துக்காக வெகுவாகப் பாரட்டப்பட்ட அவர், இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் மிகப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

 

 

அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தனது இரங்கலை ட்விட்டர் வாயிலாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக அண்ணாச்சலம் அவர்கள் இருந்தபோது பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார் என்பது குறிப்பிட்டுத்தக்கது.

 

 

Previous articleஉலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!
Next articleநடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம்!! பெண் யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!