இந்திய – ரஷ்ய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Photo of author

By Parthipan K

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா – ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமது வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.