73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!!
இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையடுத்து கோவையில் இன்று(செப்டம்பர்17) கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமராகும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 73வது பிறந்தநாளை கொண்டாடி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73வது பிறந்தநாளை கொண்டாடி வகையில் கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் போத்தனூரில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இந்த இலவச திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண விழா நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கண்டார். மேலும் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விரும்பினார் நிகழ்ச்சியில் தாலியை மணமக்களுக்கு எடுத்துக் கெடுத்து திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை அண்ணாமலை அவர்கள் வாழ்த்தினார்.
திருமணவிழா நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. அனைத்து ஜோடிகளுக்கும் தலா ஒரு நாட்டு மாடு, மிக்சி, கிரைண்டர், கட்டில், பீரோ, மெத்தை, குத்து விளக்கு, பூ, பழங்கள், காய்கறிகள், பாய், சமையலுக்குத் தேவையான வீட்டு பாத்திரங்கள் ஆகிய அனைத்தும் சீர் வரிசையாக வழங்கப்பட்டது. புதுமண தம்பதிகளுக்கு அண்ணாமலை அவர்கள் சீர் வரிசையை வழங்கினர்.