10000 ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை அம்சங்களுடன் ஸ்மார்ட்போனா!!! விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன்!!!

0
32
#image_title

10000 ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை அம்சங்களுடன் ஸ்மார்ட்போனா!!! விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போன்!!!

10000 ரூபாய் விலைக்கு 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50 மெகா பிக்சல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. விவோ பயனர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்துடன் விவோ நிறுவனம் புதிய விவோ ஒய் 17எஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்…

* புதிய விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 13 ஓ.எஸ் மற்றும் ஃபன்டச் 13 ஓ.எஸ் வசதியுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி கொண்டது.

* புதிய விவோ ஒய்எஸ்17எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 4ஜிபி விரிச்சுவல் ரேம் வசதியுடன் 64 ஜிபி ரோம் மெமரி கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் போன் 8ஜிபி ரேம் + 64 ஜிபி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இதில் 1 டிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட் போனில் டூயல் சிம் நானோ ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படுகின்றது.

* விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்.எ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபி54 தர டெஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

* விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 50 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மைக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரியர் கேமராவில் ஹெச்.டி.ஆர், பொக்கெ வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் செல்பி எடுப்பதற்கு என்று 8 மெகா பிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் சைடு பிங்கர்பிரின்ட் சென்சார் வசதி வழங்கப்பட்டுள்ளது.

* விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போன் ஸ்லிம் டிசைனில் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றது. இந்த விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போன் 186 கிராம் எடை கொண்டுள்ளது. அதே போல 163.74 மிமீ நீளமும், 75.43 மிமீ அகலமும், 8.09 மிமீ தடிமனும் கொண்டுள்ளது.

* விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட் இ, வைபை 802, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், போன்ற கனக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுகின்றது. மேலும் 3.5 எம்.எம் ஆடியோ ஜேக் வசதியும், டைப்-சி சார்ஜிங் போர்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

* விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போன் ஃபாஸ்ட் கிரீன் மற்றும் க்ளிட்டர் பர்பிள் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

* இத்தனை அம்சங்கள் கண்ட விவோ ஒய்17எஸ் ஸ்மார்ட்போன் 10000 ரூபாய் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.