எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?

Photo of author

By Vinoth

எடுபடாத பிரின்ஸ்…. சுமார ரக சர்தார்…. முதல் நாள் வசூல் எவ்வளவு?

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் நேற்று முன் தினம் வெளியாகின.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது.

அதே போல கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து காரணமாக பெரியளவில் ரசிகர்கள் இந்த படத்தை கழுவி ஊத்தவில்லை. அடைக்கப்பட்ட பாட்டில்களில் விறகப்படும் தண்ணீர் அரசியல் பற்றிய படமாக சர்தார் உருவாகியுள்ளது. கார்த்தி பல கெட்டப்களில் நடித்துள்ளார். ஆனால் அவை எதுவும் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை.

ப்ரின்ஸ் திரைப்படம் மிகக் குறுகிய படமாக  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ரிலீஸுக்கு முன்பாகவே 12 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டது. அப்படி ட்ரிம் செய்யப்பட்டும் இந்த படம் ரசிகர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் இந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் நாளில் இந்த இரண்டு படங்களும் நல்ல வசூலையே பெற்றுள்ளன. சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம் 7.01 கோடி ரூபாயும், கார்த்தியின் சர்தார் 6.91 கோடி ரூபாயும் வசூலித்துள்ளன. அடுத்தடுத்து வார விடுமுறை நாள் மற்றும் தீபாவளி விடுமுறை என்பதால் வசூல் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.