எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

0
56

எல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. போட்டி நடக்கும் மெல்போர்னில் மழை பெய்வதற்கு அதிகளவு வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன.

“எங்கள் அணியின் ஹாரிஸ் ராஃப் இங்கு விளையாடினார், இங்குள்ள சூழ்நிலைகள் அவருக்குத் தெரியும், இது பிக் பாஷ் லீக்கில் அவரது சொந்த மைதானம். எனவே அவர் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சில தகவல்களை அனுப்பியுள்ளார். பந்து வீச்சாளராக அவர் மேம்பட்ட விதம், வழி. அவர் வழிநடத்துகிறார். ஷஹீன் இல்லாததை அவர் எங்களை உணர விடவில்லை. மேலும் அவர் ஒரு பெரிய உதவியாக இருப்பார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் நாலாப்பக்கமும் பந்துகளை பறக்க விடுகிறார். அவரை மட்டுமில்லை, அனைத்து பேட்ஸ்மேன்களையும் வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது” எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

“பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. அதிலும் காயம் காரணமாக வெளியேறிய ஷாகின் அப்ரிடி இப்போது அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்  அதே நேரத்தில் பாகிஸ்தானின் பேட்டிங் அவ்வளவு பலமாக இல்லை. மிடில் ஆர்டரில் யாரும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதனால் பாபர் ஆசாம் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த வேண்டும்.” என கம்பீர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.