சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார்.
ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை என்று ஐகோர்ட்டு கூறி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் 27 ஆண்டு காலம் தவறான சிறைவாசம் அனுபவித்து ஜாங் யுகுவான் விடுதலையாகி இருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.