சாய் பாபா எல்லாத்தையும் பாத்துட்டுதான இருக்க… அணியில் இடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா பகிர்ந்த புகைப்படம்!

Photo of author

By Vinoth

சாய் பாபா எல்லாத்தையும் பாத்துட்டுதான இருக்க… அணியில் இடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா பகிர்ந்த புகைப்படம்!

இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

டி 20  உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது இந்திய . நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வங்க தேச தொடரில் மீண்டும் அவர்கள் களமிறங்குகிறார்கள்.

இந்நிலையில் நியுசிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களுக்கும், அந்த வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வாய்ப்புக் கிடைக்காத விரக்தியில் பிருத்வி ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய்பாபாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து “எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான் இருப்பாய் என நம்புகிறேன்” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா “விரைவில் பிருத்வி ஷாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும்” என ஆறுதலாக பேசியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக்