வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர்! வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!

0
71

தற்போது மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி. ஆனால் இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார்.

இவர் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய போது பல்வேறு நபர்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு அவர் மீது பலர் புகார் தெரிவித்து வந்தார்கள்.

அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. தற்போதைய முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அந்த காலகட்டத்தில் இவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.

மேலும் இவர் ஆளும் கட்சியாக இருப்பதால்தான் இவர் ஊழல் செய்திருக்கிறார் என்று புகார் வந்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்தார் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

ஆனால் தற்பொழுது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது யாரை ஊழல்வாதி என்று தெருத்தெருவாக பிரச்சாரம் செய்து வந்தாரோ அவரையே தன்னுடைய அமைச்சரவையில் முக்கிய இலாக்காவின் அமைச்சராக நியமனம் செய்திருக்கிறார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.

அதோடு யார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தாரோ அவருக்கு தற்போது பரிந்து பேசி வருகிறது திமுக.

இது தொடர்பாக வெளியில் விசாரித்தால் திமுகவின் கொள்கை பிடிப்பு அவ்வளவுதான். தனக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் விமர்சனம் செய்வதும், தன் பக்கம் வந்துவிட்டால் ஊழலே செய்தாலும் அவர்களை அரவணைத்து செல்வதுதான் திமுகவின் குணம் என்று அரசியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி மீது வந்த புகார்களை அப்போது அவர் அமைச்சராக இருந்தபடியால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் கிடப்பில் போட்டனர்.

ஆனால் சைபர் கிரைம் காவல் துறையினர் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்களான பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டவர்கள் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தற்பொழுது இந்த வடக்கானது சென்னை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற மூன்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் செய்யப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புகார் தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிட்டனர்.

காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிபாலாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதோடு இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி மைதான புகார்களை மறுபடியும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.