நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்தியாவில் நோய் தொற்று பரவ தொடங்கியது அன்றிலிருந்து இன்றுவரையில் மாநில அரசுகள் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசும் இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. சமீபகாலமாக நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நீடித்து வந்த நிலையில், தற்சமயம் அதன் வேகம் சற்றே குறைந்து இருக்கிறது. ஆனாலும் மீண்டும் அந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.போதாக்குறைக்கு இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நோய்த்தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 1964 பேருக்கு நோய் தொற்று உறுதியான சூழலில் மொத்த நோய் தொற்று பாதிப்பு 25 லட்சத்து 81 ஆயிரத்து 94 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் 28 பேர் இந்த நோய்க்கு பலியான சூழலில் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 395 ஆக அதிகரித்திருக்கிறது. 1917 பேர் பூரண நலம் பெற்று அதை அடுத்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 317 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தனியார் மருத்துவமனையில் பொது மக்களுக்கான சிகிச்சைக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. தீவிரமில்லாத ஆக்சிஜன் இல்லாத படுக்கை காண ஒருநாள் கட்டணம் 3,000 ரூபாய் நிர்ணயிக்கப்படுவது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தீவிரமில்லாத ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கை காண கட்டணம் ரூபாய் 7000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு வெண்டிலேட்டர் உடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு 15,000 நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.