தங்க மகன் நீரஜ் சோப்ராவை கவுரவித்த பெட்ரோல் நிலையம்! எப்படி தெரியுமா?

0
92

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவரை கௌரவிக்கும் விதத்தில் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு தொடர்ச்சியாக பாராட்டுகளும் ,பரிசுகளும் குவிந்து வருகிறது.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடந்து முடிந்தது இதில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமார், உள்ளிட்டோர் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டை போட்டியில் பேட்மிண்டனில் பிவி சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா இந்திய ஹாக்கி அணியினர் உள்ளிட்டோர் வெண்கல பதக்கம் என ஒட்டுமொத்தமாக இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது.

அந்த விதத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பதறவைக்கும் வகையில் கரூர் டோல்கேட் பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நீரஜ் என்ற பெயர் இருப்பவர்களுக்கு தலா 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் நீரஜ் என்ற பெயர் இருப்பவர்கள் எங்களுடைய பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படும் என்றும், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தச் சலுகை நேற்று தொடங்கி நாளை வரையில் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.