மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடையா? காவல்துறைக்கு நாங்கள் கல்லா கட்டுகிறோம்! ஒயின்ஷாப் உரிமையாளர் திமிர் பேச்சு!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்றாம் தால் காந்தி சிலை அருகில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது .தனியார் மதுபான கடையை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,போக்குவரத்து இடையூறாகவும் செயல்பட்டு வருகிறது.இதைப்பற்றி தனியார் மதுபான கடை மேலாளரிடம் விசாரித்த பொழுது அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை க்கும் நாங்கள் கல்லா கட்டி விட்டு தான் கடை நடத்தி வருகிறோம்.யாரிடம் சென்று வேனாலும் முறையிடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனியார் மதுபான கடை மேளாளர் தெரிவிக்கின்றார்.
மகாத்மா காந்தி சிலை அருகே தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே மாரியம்மன் கோவில் பெருமாள் கோவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பெண்கள் நடந்து செல்லும் பாதையாக உள்ளனர் . தனியார் மதுபான கடையில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு அங்கு நடந்து கொண்டிருக்கும் பெண்களிடம் சில்மிசம் மற்றும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்களது ஆடை முழுவதும் அகற்றி விட்டு நடுரோட்டில் நின்று நடனமாடி வருகின்றனர்.இது பெரியகுளம் பொதுமக்களுக்கு முற்றிலும் பெண்களுக்கும் மிகவும் வருத்தம் அளிக்கின்றனர்.எனவே பெரியகுளம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மது பானக் கடையை மூடக்கோரி வலியுறுத்திகின்றனர்