தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

0
163
A Happy News for School Kids! Holidays for schools until June 20!
A Happy News for School Kids! Holidays for schools until June 20!

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற கொடிய விஷப்பண மழையில் நனைந்து வருகின்றன.அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் விபரம் போடிநாயக்கனூர், உத்தபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இத்ணையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கண்ணீருடன் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உள்ளனர். கெடுபிடி வசூல் செய்யும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,மெட்ரிக் பள்ளிகள் மீது மாநில கல்வி துறை, மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெற்றோர்களின் உள்ள குமுறல்கள் குறையும். மேலும் மாணவர்களின் எதிர்கால நலன் காக்க ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையும் மற்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையும் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட மாணவர்கள் சேர்க்தையின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என தமிழக முதல்வருக்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக விடியல் முதல்வர், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு புத்தங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதில், உண்மை நிலையினை தெளிவுபடுத்திட வேண்டும். தேனி மாவட்டத்தில் சமச்சீர் பாடப் புத்தகங்கள் கூட தனியார் பள்ளிகளில் வழங்கப் படவில்லை…… என்பதை காணமுடிகிறது.தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தொடர் அலட்சியப் போக்கால் , அவல நிலைக்கு தள்ளப்படும் மாணவ, மாணவிகள்…… தனக்கும், பள்ளிகளுக்கும் இடையேயுள்ள ஏஜெண்டுகளையும், மாமூலையும் தவிர்த்தால் மட்டுமே, நியாயமும், நீதியும், உண்மையான நடவடிக்கையும் பிறக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை…… தேனி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு விடியல் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இனி கவலையே வேண்டாம் வீடு தேடி வரும் ஆதார் சேவை!
Next articleஅரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?