திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Photo of author

By Vijay

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Vijay

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம் தான். தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. தென் மாவட்டத்திலிருந்து வட மாவட்டங்களுக்கோ அல்லது பெங்களுர், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சேலத்தை தொட்டு விட்டு தான் செல்ல வேண்டும்.
சேலத்தில் புகழ் பெற்று விளங்கும் இடங்கள் ஏராளம் உண்டு, அவைகளில் முக்கிய இடம் பெற்றிருப்பது புதிய பேருந்து நிலையம், இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்களுக்கு செல்லும் வகையில் 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
சேலத்தின் முக்கிய மையமாக விளங்கும் இந்த பேருந்து நிலையத்தில் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு, அதாவது பேருந்து நிலையத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவம் மற்றும் திருநங்கைகளின் தொல்லை ஆகியவற்றால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் நிலையம் இருந்தாலும், பெயரளவிற்கே அவர்கள் செயல்படுவதாகவும், பயணிகள் எந்த ஒரு புகார் அளித்தாலும் அதனை சரியான முறையில் விசாரிக்காமல் விட்டு விடுவதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பேருந்து வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாணவிகள் மற்றும் இதர பயணிகள் பயணம் செய்ய அங்கு வரும் போது பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பேருந்து நிலையம் தொடங்கி ஐந்து ரோடு மற்றும் ரயில் நிலைய சாலை வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகளின் பாலியல் தொந்தரவால் எண்ணற்ற வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு வருவது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த வொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஓமலூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் வியாபார விஷயமாக கேரளா சென்றுவிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது வாகனத்தை எடுத்து கொண்டு 5 ரோடு வழியாக சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கையை பார்த்தவுடன் சபலத்தால் அவரிடம் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற இளைஞர் தான் வைத்திருந்த பணத்தை சரிபார்க்கும் போது 65,000 குறைவாக இருந்துள்ளது. உடனே இது குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலிசார் சம்பந்தப்பட்ட திருநங்கைகளான ஹர்சிதா மற்றும் அமிதா என்ற இவர்கள் இளைஞரிடம் பணம் திருடியதை ஒப்பு கொண்டு அந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.
அந்த இளைஞரை போன்று இன்னும் ஏராளமான நபர்கள் திருநங்கைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.