செரீனாவின் ஆக்ரோசமான ஆட்டத்தால் கால்இறுதிக்கு முன்னேற்றம்

Photo of author

By Parthipan K

கிராண்ட்சிலாம் என்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டத்தையும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், மரியா ‌ஷகாரி என்ற கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவரை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் ‌ஷகாரி 8-6 என்ற கணக்கில் வென்றார். வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா ஆக்ரோசமாக ஆடினார். இதனால் அவர் 6-3 என்ற கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.