வேளாண்மை அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை
வேளாண்மை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டப் பயன்களை விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்ட திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி முடிய உரிய அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வேளாண்மைத்துறையில் உள்ள 23 துணை வேளாண்மை இயக்குனர்கள் வேளாண்மை இணை இயக்குனர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குனர்களாகவும் பணியாற்ற அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையினை தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறையானது தற்போது வெளியிட்டுள்ளது.