செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

0
119
#image_title

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று
ஆண்டிற்கு இருமுறை பொதுமக்களிடம் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.சென்னையில் மொத்தம் 13.5 லட்சம் சொத்து வரி செலுத்தும் ஆட்கள் இருக்கின்றனர்.

இந்த சொத்து வரியானது அரையாண்டுக்கு ₹750 கோடி முதல் ஆண்டுக்கு ₹1,500 கோடி வரை சொத்து வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை சென்னை மாநகராட்சி செய்து கொடுத்து வருகிறது.இந்நிலையில் நடப்பு அரையாண்டில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை முறையாக செலுத்தி விட்ட நிலையில் மீதமுள்ள 5.4 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தாமல் நாட்களை கடத்தி செல்கின்றனர் என்ற தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது.

மேலும் அரையாண்டிற்கான சொத்து வரியை இதுவரை செலுத்தாத நபர்கள் இந்த மாத இறுதிக்குள் ஆன்லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ செலுத்தி விட வேண்டும்.நேரடி முறையில் சொத்து வரி செலுத்த விரும்பும் நபர்கள் செப்டம்பர் 28 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய நாட்களில் ரிப்பன் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வருவாய்துறை தலைமை இடம் மற்றும் மண்டலங்களில் இருக்கும் வருவாய்துறை உள்ளிட்ட இடங்களில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செப்டம்பர் 30க்குள் சொத்து வரி செலுத்த தவறிய நபர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டுமென்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதேபோல் சொத்து வரியை காசோலையாகவோ, வரைவோலையாகவோ இ-சேவை மையம்,மாநகராட்சி இணையதளம்,நம்ம சென்னை செயலி என்று எதில் வேண்டுமானாலும் செலுத்தலாம் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தது இருக்கிறது.இந்நிலையில் சொத்து வரி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஜூன் மாதமே சென்னை மாநகராட்சி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசீனாவில் கொரோனா போன்ற புதிய தொற்று!!! இது அதுக்கும் மேல!!! 
Next article9 பந்துகளில் அரைசதம் அடித்த நேபாள் வீரர்!!! யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோர் சாதனை ஒரே போட்டியில் முறியடிப்பு!!!