உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா?? 

0
207
#image_title

உடலுக்கு தேவையான சக்திகளில் முதன்மையான பங்கு வகிக்கும் புரோட்டின்!! யார் யாருக்கு எவ்வளவு வேண்டும் என்று தெரியுமா?? 

நமது உடலுக்கு தேவையான வளர்ச்சியும், மற்றும் உடலை கட்டமைக்கவும் புரோட்டின் சத்து உடலுக்கு மிக மிக அவசியம். இது  புரோட்டிலோஸ்’ என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்தது . இதன் பொருள் ‘அடிப்படை’ அல்லது ‘முதல் இடம்’ என்பதாகும்.

முதன் முதலில் புரோட்டீன் என்ற வார்த்தை 1883 ஆம் ஆண்டு தான் வந்தது. நமது உடலை சமநிலைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும் இந்த சத்தானது சராசரியாக ஒரு நாளைக்கு 56 கிராம் வீதத்தில் தேவைப்படுகிறது. மேலும் இது நமது உடலின் எடையில் 18 முதல் 20 சதவீதம் வரை புரதத்தால் ஆனது. நாம் சாப்பிடும் புரதச்சத்தானது இரண்டு அல்லது அதற்கு குறைவான நாட்கள் தான் நம் உடலில் இருக்கும்.

யார் யாருக்கு எவ்வளவு புரோட்டின் தேவை இதோ; 

1. மூன்று வயது வரை 13 கிராம்.

2. 4 – 8 வயது வரை 19 கிராம்.

3.  9 – 13 வயது வரை 34 கிராம்.

4.  14 – 18 வயது வரையுள்ளவர்களுக்கு 46 கிராம்.

5. 14 – 18 வயது வரையுள்ளவர்களுக்கு 52 கிராம்.

6. 19 வயதைத் தாண்டியவர்களுக்கு 46 கிராம்.

7. 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராம் தேவை.

**நமது உடலுக்கு அல்புமின் என்ற புரதம் மிகவும் முக்கியமாக தேவை. இல்லாவிட்டால் நமது உடல் முழுவதும் வீக்கம் ஏற்படும். அடுத்ததாக நமது தலைமுடி கெரோட்டீன் என்ற புரதத்தினால் ஆனது.

** நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புரதங்கள் உள்ளன. இது அதிகமானாலும் நமக்கு தீமை. குறைவாக இருந்தாலும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.

** உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் புரோட்டினை அளவோடு பயன்படுத்துவது நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல உடலில் புரோட்டின் அதிகம் சேர்ந்தால் எலும்பு சிதைவு நோய், புற்றுநோய், சிறுநீரகத்தில் கல் சேருதல், போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

புரோட்டின் நிறைந்துள்ள உணவுகள்; 

1. சூரியகாந்தி விதை

2. சோயா பீன்ஸ்

3. பட்டாணி

4. துவரம் பருப்பு

5. பாதாம் பருப்பு

6. முந்திரி

7. பாதாம் நெய்

8. சோயா பால்

9. கோதுமை ரொட்டி

10. பசலைக்கீரை (வேக வைத்தது)

11. கோழி இறைச்சி 

போன்றவற்றில் புரோட்டின் நிறைந்துள்ளது.

Previous articleமாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! 
Next articleகால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை!