மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!! 

0
145
#image_title

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!அரை நாள் மட்டும் தான் பள்ளிகள் இயங்கும்!!

பொதுத் தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்ட ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வெயிலின் தாக்கம் சற்று கூட குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறி உத்தரவிட்டனர். ஆனால் அப்பொழுதும் வெயிலின் தாக்கம் சிறிது கூட குறையவில்லை.

எனவே மாணவர்கள் பள்ளிக்கு வர சிரமமாக இருக்கும் என எண்ணி பள்ளிக்கல்வித்துறையானது ஜூன் 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியது. அந்த வகையில் பள்ளி திறப்பு தேதி ஆனது தள்ளிவைக்கப்பட்டதால் பாடங்கள் முடிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே விரைந்து பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறையானது விடுமுறை விட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் எனக் கூறியது.

அந்த வகையில் சென்ற வாரம் முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரமே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் தான் பள்ளிகள் நடத்தப்பட்டது. உயர்கல்வி செய்த மாணவர்களுக்கு தான் முழு நேர பள்ளிகள் செயல்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த வாரமும் ஏதேனும் தொடக்கக்கல்வி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு பள்ளி செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் வருமா என எதிர்பார்த்திருந்தனர்.

அதனடிப்படையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என கூறியுள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பள்ளி செயல்படும் நேரம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.