ரயில் தீ விபத்தில் உயிரிழந்த நெளபிக் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பது அஞ்சலி செலுத்திய பின் எடையன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெளபிக்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரளா சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சஹாரா(2), ரஹ்மத், நெளபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.மர்ம நபர் தீவைத்து எரித்ததில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த நெளபிக் உடல் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு உடல் கொண்டுவரப்பட்டது.இவரின் உடலில் தீகாயம் இல்லை எனவும் தீ பிடித்ததால் தப்பிப்பதற்காக ஓடும் ரயிலிருந்து குதித்ததில் உடலில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
கண்ணூர் கொட்டாலிபுரத்தில் உள்ள முதியோர் ஓய்வு இல்லத்தில் பொது தரிசனத்திற்காக வைப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர் . பின் அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு எடையன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெளபிக்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரளா சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நௌபிக்கிற்கு புஷ்ரா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். நௌபிக் நேற்று காலை மலப்புரம் அகோட்டில் நோன்பு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.
நோன்பு முடித்துவிட்டு ரயில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மேலும் தனது மைத்துனரை கண்ணூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கச் சொன்னார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் திரும்பி வராததால் தேடி பார்த்தார். இன்று அதிகாலையில் நௌபிக் இறந்தது உறவினர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் தெரியவந்தது.
இன்று மதியம் வரை குழந்தைகள் யாருக்கும் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. உள்ளூர் மக்களுக்கு மிகவும் பிடித்த நபராக இருந்த நௌபிக்கின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஊரையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.