சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!!

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!!

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் தொடர் ஏப்ரல் 31 ஆம் தேதி தொடங்கியது.இதில் அகமதாபாத்தில் குஜராத்துடன் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியுற்ற நிலையில் அடுத்த போட்டி இன்று லக்னோ அணியுடன் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சின்னதல ரெய்னா இல்லாமல் முதல்முறையாக சி.எஸ்.கே அணி சேப்பாக் மைதானத்தில் விளையாட உள்ளது .மேலும் ருத்துராஜ் சேப்பாக் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்காக முதல் முறையாக களமிறங்க உள்ளார். ஆகையால் சி.எஸ்.கே ரசிகர்களிடையே இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு சி.எஸ்.கே அணி சேப்பாக்கில் களமிறங்க உள்ளது.மேலும் தோனி கடந்த வருடம் அளித்த பேட்டியில் சி.எஸ்.கே அணிக்காக தனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கில் தான் நடைபெறும் என்பதை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.