உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

Photo of author

By Jayachithra

உயிருக்கு எமனாகும் பப்ஜி…பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தந்தை!! தற்கொலை செய்து கொண்ட மகன்!!

மதுரை மாவட்டத்தில் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை, அவர் தந்தை திட்டிய காரணத்தினால் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன.

மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனை அடுத்து சற்றே கொரோனா வைரஸ் தொற்றானது குறைந்தது. கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கமானது குறைந்து வருகிறது.அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் ஜெய் பிரசாத் வயது 10 ஆகும். இவர் ஆணையூர் தனியார் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தார்.

இதனை அடுத்து இந்த சிறுவன் ஜெய் பிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு வந்தன. ஆனால் அந்தச் சிறுவன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், செல்போனில் எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்த காரணத்தினால் தந்தை கண்டித்து இருக்கின்றார்.

அதனால் மன விரக்தி அடைந்த ஜெய பிரசாத் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பாக சுப்ரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.