தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இன்று தொடங்கி வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படியும், மின்சார கம்பங்கள், மற்றும் மரத்தின் அடியில் மழை காரணமாக ஒதுங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.