பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

Photo of author

By Divya

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

Divya

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.

அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் வரவுள்ள 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3 முறையாக வெற்றிபெறும் பட்சத்தில்அவை பெரிய சாதனையாக பார்க்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பிற கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில் மர்ம நபர் ஒருவரால் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த தொலைபேசி காலில் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக பகிரங்க மிரட்டல் விடுத்த அந்த அடையாளம் தெரியாத நபர் மும்பை நகரின் பேமஸான ஜேஜே மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்க போவதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது இருப்பது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மும்பை போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு வந்த தொலைபேசியில் பேசிய நபரின் எண்ணை வைத்து அவரை மும்பை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.