மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புட்ஸ்!!! இதை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா!!?
தொடர்ந்து அதிகமாக ஜங்க் புட்ஸ் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றது. பர்கர், சிப்ஸ், ஃபிரென்ச் பிரையிஸ் போன்ற பல வகையான உணவுகள் இருக்கின்றது.
ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஜங்க் புட்ஸ் என்பதற்கு தமிழில் குப்பை உணவுகள் என்று அர்த்தம். பெயரிலேயே தெரிகின்றது ஜங்க் புட்ஸ் உணவுகள் குப்பையை போன்ற உணவுகள் என்று. வீட்டில் குப்பை எப்படி எதுக்கும் உதவாமல் இருக்குமோ அதே போலத் தான் இந்த ஜங்க் பூட்ஸ் உணவுகளும். நமது உடலுக்கு தேவையே இல்லாத கெட்ட சத்துக்களை கொடுத்து பல தீமைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. ஜங்க் புட்ஸ் தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தொடர்ந்து ஜங்க் புட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்…
* ஜங்க் புட்ஸ் அதிகமாக தொடர்ந்து சாப்பிடுவது நமக்கு மனச்சோர்வை அளிக்கின்றது.
* ஜங்க் புட்ஸ் அதிகமாக சாப்பிடுவது நமது உடலில் பலத்தை குறைத்து பலவீனத்தை அளிக்கின்றது.
* ஜங்க் பூட்ஸ் தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் பொழுது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* ஜங்க் புட்ஸ் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நமக்கு நினைவாற்றல் கூறுகின்றது.
* நாம் அதிகமாக ஜங்க் புட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* அதிகமாக ஜங்க் புட்ஸ் சாப்பிடும் பொழுது மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றது.
* தற்பொழுது உள்ள காலத்தில் அதிகம் பேருக்கு இதய நோய் வருவதற்கு இந்த ஜங்க் புட்ஸ் தான் முக்கிய காரணம் ஆகும். ஜங்க் புட்ஸ் அதிகமாக சாப்பிடும் பொழுது இதய நோய் வரக்கூடும்.
* ஜங்க் புட்ஸ் நமது கல்லீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
* ஜங்க் புட்ஸ் நமது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை ஏற்றம் இறக்கமாக வைக்கும்.
* ஜங்க் புட்ஸ் நமது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.