அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு – புதுச்சேரி முதலமைச்சர்!

Photo of author

By Parthipan K

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு. இந்த அறிவிப்பால் அங்கிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தங்களின் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கூறியதாவது : “நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம், புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்தை இயக்குவதற்காக, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று பல நலத்திட்டங்களை முதலமைச்சர் நாராயணசாமி செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கொரோனா தொற்றின் காரணமாக சில முக்கிய திட்டங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தி வந்தது தடைசெய்யப்பட்டு இருந்தது, தற்போது அதை மீண்டும் துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.