லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

0
33
#image_title

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் வீட்டில்
அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக குடி வர இந்த ஒரு தூபத்தை மட்டும் போட்டால் போதும்.கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*வெள்ளை குங்கிலியம் – 100 கிராம்

*துளசி இலை பொடி – 100 கிராம்

*மல்லிகைப்பூ பொடி – 100 கிராம்

*அருகம்புல் பொடி – 100 கிராம்

*வெட்டி வேர் பொடி – 100 கிராம்

சாம்பிராணி தூபத்திற்கு முதலில் வெள்ளை குங்கிலியம் எடுத்து கொள்ளவும்.இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான்.அடுத்து துளசி இலை இ கைப்பிடி அளவு எடுத்து நிழலில் காய வைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இதில் 100 கிராம் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.ஒருவேளை துளசி இல்லாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் துளசி பொடியை பயன்படுத்தலாம்.

பின்னர் வாசனை நிறைந்த மல்லிகை பூ 2 கைப்பிடி அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பின்னர் பொடி செய்து 100 கிராம் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.அடுத்து ஆன்மீகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்த அருகம்புல் எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து 100 கிராம் என்ற அளவில் எடுத்து கொள்ளவும்.அருகம்புல் கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அருகம்புல் பொடி வாங்கி பயன்படுத்தலாம்.

இறுதியாக நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் வெட்டிவேர்.இந்த வெட்டிவேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒன்று.இதை வாங்கி நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.இதில் இருந்து 100 கிராம் எடுத்து கொள்ளவும்.

தூபம் போட மொத்தம் இந்து பொருட்கள் அதாவது வெள்ளை குங்கிலியம்,துளசி இலை பொடி,மல்லிகை பூ பொடி,அருகம்புல் பொடி,வெட்டி வேர் பொடி ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.இவை தான் சாம்பிராணி தூபத்திற்குரிய பொடியாகும்.தினமும் இருவேளை காலை மற்றும் மாலையில் இந்த பொடிகளை கொண்டு வீட்டில் தூபம் போடா வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர அஷ்டலட்சுமிகளும் நம் இல்லம் தேடி வந்து குடியிருப்பார்கள்.

இதனால் பணப் பிரச்சனை வராமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.அது மட்டும் இன்றி வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.பணம் வைக்கும் இடத்தில் வாசனை நிறைந்த ஏலக்காய்,சோம்பு,துளசி இலை,பச்சை கற்பூரம் உள்ளிட்டவற்றை வைப்பதினால் மகா லட்சுமி தாயார் நமக்கு செல்வ வளத்தை அள்ளி கொடுப்பார்.