டென்மார்க்கில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அவர்கள் தனது சொந்த பணியின் காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என அவருடைய தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர் ஆனால் தற்போது தங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த போட்டியில் விளையாட சிந்து சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.