கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Photo of author

By Rupa

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார மையத்திற்கு சென்றுள்ளனர்.

அம்மையத்தில் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதும் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவர்களின் கணக்குகளை அரசிடம் காட்டுவதற்காக அவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்து கணக்கெடுத்துக் கொள்வர். அந்த வகையில் இவர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டுமா என்று கேட்டுள்ளனர். இதற்கு தடுப்பூசி செலுத்திய மருந்தாளர் ஆதார் அட்டை தேவையில்லை இது வெறிநாய் கடிக்கான தடுப்பூசி என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அந்தப் பெண்மணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்தது, இந்த பெண்மணிகள் தடுப்பூசி போடும் இடத்திற்கு செல்லாமல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரத்தில் அங்கு பணிபுரியும் மருந்தாளர் வேறொரு தனியார் மருந்தாளர் ஒருவரை பணி அமர்த்தி விட்டு வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றது விசாரணை மூலம் தெரிய வந்தது.

அதன்பின் இச்சம்பவம் குறித்து குற்றவியல் மாவட்ட குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எதற்காக நோயாளிகள் வந்துள்ளனர் என்று கேட்காமல் தடுப்பூசியை தவறாக போட்ட மருந்தாளரை பணி நீக்கமும் தன் வேலையை விட்டுவிட்டு வெளியே சென்ற மருந்தாளரை இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் சமூக சுகாதார மையத்தின் மேற்பார்வையாளருக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.