ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது?
துலிப் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா மேற்கு மற்றும் இந்தியா தெற்கு ஆகிய ஸோன்கள் மோதிக்கொண்டன.
தென் மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளில் ஒழுக்கக் கேடாக நடந்துகொண்ட தனது அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறியது கிரிக்கெட் உலகத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஜெய்ஸ்வால் பீல்டிங்கின் போது எதிரணி வீரரான ரவி தேஜாவிடம் மோசமான வார்த்தைக் கூறி ஸ்லெட்ஜிங் செய்தார். அப்போது கள நடுவர் இளம் பேட்டரின் ஸ்லெட்ஜிங் குறித்து புகார் செய்தார். ரஹானே அவருடன் ஒரு பேசினார். அப்போது ஜெய்ஸ்வால் ரஹானேவிடமும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதனால் கோபமான ரஹானே அவரை களத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அதன் பின்னர் 7 ஓவர்களுக்கு பிறகு அவர் மீண்டும் களத்துக்கு திரும்பினார். ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் இளம் வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என ரஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டலத்திற்கு பெரிய வெற்றியை தேடித் தந்தார். இதையடுத்து போட்டிகு பிறகு அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஜெய்ஸ்வால் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து கேட்டதற்கு, போட்டிக்குப் பிறகு கேப்டன் ரஹானே “எதிரணி வீரர்கள், நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை எப்போதும் மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே நீங்கள் சில சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் கையாள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.