இதை செய்தால்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்! தேர்தல் ஆணையத்திற்கு தகவல் ஆணையம் முக்கிய யோசனை!

0
76

பிரதமர், முதல்வர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை ஆர்டிஐ மூலமாக மக்கள் அறிந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சென்னை திருவொற்றியூரை சார்ந்த தூய மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில்தெரிவித்திருப்பதாவது, அரசியல்வாதிகளை குறை கூறுவதை நவீன சமுதாயத்தில் பெருமையாக நினைக்கிறார்கள்.

ஏராளமான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள். அதனை யாரும் பாராட்டுவது கிடையாது என தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பது தொடர்பான தவறான கருத்தால் தான், வாக்கு சதவீதம் குறைகிறது. சென்னையில் சில வார்டுகளில் 31 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

இவ்வாறு வாக்கு சதவீதம் குறைந்தால் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக்கூடாது. இந்த தகவல்களும் பொது மக்களுக்கு தெரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் செய்யும் மக்கள் பணிகள் ஆர்டிஐ மூலமாக பொதுமக்களுக்கு தெரிய வர தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும் என்று அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.