விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
158

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சூழ்நிலைக்கேற்ப தனது வியூகங்களை மாற்றி அமைத்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் விருச்சிக ராசிக்கு சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் உங்களுடைய ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பேச்சுவன்மையினால் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள்.

பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில உதவி கிடைக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். மேலும் தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். சிந்தனைகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள்.

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வம்பு வழக்குகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :

தந்தை வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நிதானம் வேண்டும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொன், பொருட்கள் கையாளுவதில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்களுக்கு போட்டி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பழக்கவழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் செயல்பாடுகள் மூலம் புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் ரகசியங்களை பகிர்வதை குறைத்து கொள்ளவும். ஆசிரியர்கள் கூறும் கருத்துக்களில் கவனம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி நாள் ஏற்படும் நன்மைகள் :

ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மாறுபட்ட அணுகுமுறைகளால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கவனம் தேவை :

சிந்தனையின் போக்கில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு முறை:

வெள்ளிக்கிழமைதோறும் காளியம்மனை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

Previous articleகடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!
Next articleஇட்லி தோசை பிரியர்களுக்கு! புதினா பொடி செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!