மீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!!
கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி அவதூறு பேசியதாக இவரின் மேல் வழக்கு தொடரப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிகிழமை என்று விசாரணைக்கு வந்தது. இதில் இவரின் சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் இவர் எம்.பி பதவியில் மீண்டும் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்து வந்தது. மேலும் இது குறித்து மக்களவை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டு,
மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வேண்டுகோள் விடுத்தும் வந்தார். இதனைத் தொடர்ந்து மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை திரும்ப பெற்று அவரின் எம்.பி பதவியை திரும்ப அவருக்கு வழங்கி உள்ளது.
எனவே, ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. யாக பதவியை தொடர இருக்கிறார். எனவே, நாளை நடக்க இருக்கும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார்.