மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

Photo of author

By Sakthi

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

Sakthi

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இருவரும் ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் மான்சரோவார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அவர்களும், மல்லிகார்ஜூன் கார்க் கலந்து கொண்டனர். மேலும் இது போல பல இடங்களில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வரிசையில் ஜெய்பூரில் உள்ள மகாராணி கல்லூரியில் ராகுல்காந்தி அவர்கள் கலந்துகொண்டார். பின்னர் சாதனை படைத்த மாணவிகளுக்கு இருசக்கர வாகனங்களை ராகுல் காந்தி அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே வந்த ராகுல் காந்தி அவர்கள் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு அதாவது 2023ம் ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.