ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

0
124
Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!
Railways' new provision for AC coach passengers!! At least look and walk!!

ஏசி பெட்டியில் பயணிப்பவர்களுக்கு ரயில்வேயின் புதிய விதிமுறை!! இனியாவது பாத்து நடந்துகோங்க!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது ஏசி பெட்டியில் பயணம் செய்யும் பொதுமக்கள் பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்று புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது .அதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஏசி ரயிலில் மட்டும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.அதில் பயணிகள் பயணம் செய்வதற்கு வசதியாக அவர்களுக்கு துண்டுகள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது வழங்கப்பட்ட தலையணைகள் மற்றும் துண்டுகள் தொடர்ந்து காணமல் போவதாக புகார்கள் வந்து கொண்டே உள்ள நிலையில் அதனை பயணிகள் வீட்டிற்கு எடுத்து செல்வதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து ரயில்வே துறை எச்சரித்துள்ளது.அந்த வகையில் தலையணைகள் மற்றும் துண்டுகளை எடுத்து செல்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இது குறித்து கண்காணிக்க படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு பொதுமக்கள் இந்த பொருட்களை எல்லாம் வீடுகளுக்கு எடுத்து செல்வதன் மூலம் இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகின்றது.

இனி பயணிகள் பொருட்களை எடுத்து சென்றால் அவர்கள் ரயில்வே சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்ய படுவார்கள் மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

Previous articleவந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?
Next articleகணவரின் மது பழக்கத்தால் எரிந்து சாம்பலான பெண்!! பரபரப்பு சம்பவம்!!