உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
210

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி! இன்று மிக கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும்.பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,பின்பு புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகம்,கேரளா,புதுச்சேரி, ஆந்திரா,மகாராஷ்டிரா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை உள்ளது.

மேலும் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு மீதமானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் கடலூர் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல் கரூர் தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் ராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீதமானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Previous articleகாற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleதமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here