தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

Photo of author

By Jayachithra

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

Jayachithra

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.