மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!!

Photo of author

By Divya

மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!!

Divya

மழை நிவாரணத் தொகை: சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் கவனத்திற்கு..!!

தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த மாத 26 ஆம் தேதி உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் தொடர் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சென்னையில் வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசித்து வருவதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்களில் பெரும்பாலானோருக்கு அவர்களது ரேசன் கார்டுகளில் சொந்த ஊர் முகவரி தான் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ரேசன் கார்டுகள் வைத்து நிவாரணம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிவாரண நிதி பெறுவதற்கான விண்ணப்பத்தில் தங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் தற்பொழுது வசிக்கும் இடம் குறித்த விவரத்தை பூர்த்தி செய்து வழங்கினால் அதிகாரிகள் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவர்கள். ஆய்விற்கு பின் தங்களுக்கான நிவாரண நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.