தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

0
119
Rain will continue for 7 more days in Tamil Nadu!! Chennai Meteorological Center information!!
Rain will continue for 7 more days in Tamil Nadu!! Chennai Meteorological Center information!!

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த வருடம் கோடை விடுமுறை முடிவடையும் முன்னரே மழை காலம் தொடங்கி விட்டதை போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது பருவ மழை மாறியதை போல சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இதுப்பற்றி சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக,

18-07-2023 மற்றும் 19-07-2023: தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-07-2023 முதல் 24-07-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Previous articleஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அறிவித்த படக்குழு!!
Next articleவசூல் சாதனை படைத்த மாமன்னன்!! படக்குழு அறிவிப்பு!!