சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன்.
இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய நோக்கம். ஏற்கனவே நான் காஷ்மீர் பண்டிட்தான். எனது அப்பா திரிலோக் சந்த் அங்கிருந்து வந்தவர்தான். அம்மா தரம்சாலா மாநிலத்தைச் சேர்ந்தவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.