மழையை தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் நிச்சயம் ஒரு புயல் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
46
#image_title

மழையை தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் நிச்சயம் ஒரு புயல் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கடந்த சில வாரங்களாக பருவமழை அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் என்று தமிழகத்தை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அதிரடியாக நிரம்பி வருகிறது.

தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் அழுகும் நிலையில் இருபதால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த கனமழையானது இந்த மாத இறுதி வரை நீடிக்க கூடும் என்று இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்பொழுது தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் ஏதேனும் ஒன்று புயல் சின்னமாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை வல்லுனர்கள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் ஒரு புயல் சின்னமாவது உருவெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கிய காரணத்தினால் இதுவரை புயல் சின்னம் உருவாகாமல் இருக்கிறது. ஆனால் இந்த மாத இறுதிக்குள் ஒரு புயல் உருவாக அதிக வாய்ப்பு இருபதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று வானிலை வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.