மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!!

0
42
#image_title

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!!

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகள் இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேசன் பொருட்கள் மாதம் ஒருமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேசன் கார்டு தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் நடந்து வருகிறது. இந்த சிக்கலில் இருந்து விடுபட ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று நமது மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஏற்கனவே வங்கி கணக்கு, பான் கார்டு, ஒட்டர் ஐடி உள்ளிட்டவைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தி வரும் மத்திய அரசு தற்பொழுது ரேசன் கார்டையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெரும்பாலானோர் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்ட நிலையில் இணைக்காத ரேசன் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வருகிறது. மத்திய அரசு கால அவகாசம் வழங்கியும் சிலர் ரேசன் கார்டில் ஆதார எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். இதனால் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ள மத்திய அரசு இதன் பின்னரும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் குறிப்பிட்ட ரேசன் அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் எதுவும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட மாட்டாது என்றும் எந்த ஒரு சலுகையும் அவர்களுக்கு கிடைக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.