31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

Photo of author

By Jayachithra

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

Jayachithra

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

ராஜபாளையத்தில் திருமணம் ஆகாத காரணத்தால் ரயிலில் விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 31 வயதான இளைஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் நேற்று 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்து உள்ளது. மேலும், அவர் திருமணம் ஆகாத விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகத் கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று 24ஆம் தேதி மாலை 3:35 மணியளவில் கொல்லம் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அது புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் மலையடிப்பட்டி எம்ஜிஆர்நகர் பகுதியில் திடீரென்று ஒரு இளைஞர் ஓடி வந்து ரயில் முன் பாய்ந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்ததில், அவர் ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்த முத்துக்காளை மகன் முத்து கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு முப்பத்தி ஒரு வயது ஆகும். திருமணமாகாமல் நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அம்மா மற்றும் அப்பா பிரிந்து வாழ்ந்த நிலையில், அம்மாவுடன் முத்துகிருஷ்ணன் அவரது அண்ணன் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்தனர் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இருவருக்கும் திருமணமாகாத நிலையில், வீட்டில் நகை ஒன்று காணாமல் போய் விட்ட காரணத்தால் அம்மாவும், அண்ணனும் முத்துகிருஷ்ணன் மீது சந்தேகப்பட்டு விசாரித்ததால் மனமுடைந்த நிலையில், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்திருக்கிறது.