ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

0
201

கோவையில் சூலூர் அருகே புதிதாக துவங்கியுள்ள ஒரு கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் குடமும், அரை கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் தேங்காயும் இலவசம் என்று கூறி உள்ளது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராமநாதபுரத்தில் ராஜசேகர் என்பவர் ‘அம்மா அப்பா’ என்ற ஒரு பெயரில் புதிதாக ஆட்டு இறைச்சி கடை தொடங்கி இருக்கின்றார். அவர் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்றை அறிவித்து இருக்கிறார்.

அதன்படி 800 ரூபாய்க்கு விற்கப்படும் ஆட்டு இறைச்சியை கிலோ 560 ரூபாய்க்கும் குடல்கறி 380 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 350க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் குடம் மற்றும் அரைகிலோ வாங்கினால் ஒரு தேங்காய் இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இது சுற்றுப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அங்கே குவிந்து நிற்கின்றனர். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் மலிவு விலையில் ஆடைகள் கிடைப்பதுடன் இலவசமாக குடம் மற்றும் தேங்காய் கிடைப்பதால் ராஜசேகர் அவர்கள் கடைக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரங்கநாதபுரம் தவிர்த்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து வாங்கி செல்கின்றனர். இது குறித்து ராஜசேகர் புதியதாக கடை திறந்துள்ளதால் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். மேலும், இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

Previous articleஇனிமே இத எந்த கடையிலயாச்சும் பாத்தோம் உடனே ஆக்க்ஷன் தான்! அமைச்சர் அதிரடி!!
Next articleஇதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here