இதுதான் அவரது சாதனை! ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த அமைச்சர்!

0
60

தேனி மாவட்டத்தில் தமிழக வீட்டு வசதி வரித்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிசைமாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்டு இருக்கின்ற இல்லங்களை ஆய்வு செய்து இருக்கின்றோம். சென்ற அதிமுகவின் ஆட்சி காலத்தில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்தத் துறை இருந்தது என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்தத் துறையின் சார்பாக மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 35 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட இதுவரையில் பொதுமக்கள் இந்தப் பகுதியில் வந்து தங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டம் முடிக்கப்பட்டது ஆனாலும் கூட அதனை கிடப்பில் போட்டு வைத்து இருக்கின்றார் ஓபிஎஸ். இதன் காரணமாக, வீடுகள் இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களை தேர்வு செய்து அங்கே குடியேற வைப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருந்துவரும் வீடுகளை புதுப்பித்து மறுபடியும் வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு இருக்கின்றோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சென்ற அதிமுகவின் ஆட்சி காலத்தில் இதுபோன்று பல திட்டங்கள் அரசால் கவனம் செலுத்தப்படாமல் இருக்கிறது. ஒரு சில நபர்கள் பயன் பெறுவதற்காக 2500 கோடி அரசு பணம் வீணடிப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தேவை இல்லாத பகுதிகளில் திட்டத்தைக் கொண்டுவந்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுதான் அன்றைய துணை முதலமைச்சர் வீட்டு வசதித்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் சாதனை என்று தெரிவித்திருக்கிறார்.