விடாது கருப்பு பின் தொடரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்! என்ன செய்யப்போகிறார் முன்னாள் அமைச்சர்!

Photo of author

By Sakthi

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றால் மட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்? எங்கு சென்றாலும் அவரை விட மாட்டோம் என்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குழந்தைகளின் தேவையான பால் வினியோகத்தில் பலகோடி ரூபாய் இழப்பை உண்டாக்கி ஊழல் செய்ததாகவும் ஆவின் நியமனங்களில் ஊழல் செய்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்சமயம் திமுக ஆட்சி அமைந்திருக்கின்ற சூழலில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.ஆனாலும் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் ராஜேந்திர பாலாஜி எந்த கட்சிக்கும் செல்லவில்லை. அவர் அதிமுகவில் தான் இருக்கிறார் என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக ராஜேந்திரபாலாஜி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நாசர் பாஜகவிற்கு சென்று விட்டால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் ஆகவே ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார் .கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்து இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பிய போது திமுக அரசின் திட்டங்களை சாதாரண மக்களும் பாராட்டுவது காரணமாகதான் முருகன் பொறாமையின் அடிப்படையில் இது போன்ற கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று விமர்சனம் செய்தார் நாசர்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் நேரடி கொள்முதல் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர் இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 46கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது இது 62 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என தெரிவித்தார்.