ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்! விரைவில் பிடிபட வாய்ப்பு!

0
171
Rajendra Balaji
Rajendra Balaji

ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்! விரைவில் பிடிபட வாய்ப்பு!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூபாய் மூன்று கோடி வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 3பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் முகாமிட்டு ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் கடல் வழியாக தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதிய காவல்துறையினர் தடுக்க கடலோர கண்காணிப்பை தீவிரப்படுத்தி ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் ராஜேந்திர பாலாஜியின் நகர்வுகளை முடக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜியின் பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளையும் முடக்கிய காவல்துறையினர் இதனை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதனால் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விரைவில் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!
Next articleநடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட்